குமரி: விஷம் குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

80பார்த்தது
குமரி: விஷம் குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே நன்றிகுழி என்ற இடத்தைச் சேர்ந்தவர் சையது அலி(27), இவர் கடல் தொழில் செய்து வந்தார். இவர் பணத்தை அதிகமாக செலவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் முக்கடல் சாலையில் விஷம் குடித்த நிலையில் கிடந்தார். ஆசாரிப்பள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று (நவம்பர் 6) இறந்து போனார். பூதப்பாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி