"ஸ்ரீபெரும்புதுாரில் பதற்றமான ஓட்டுச்சாவடிகள்... 337 இடங்கள்!

72பார்த்தது
"ஸ்ரீபெரும்புதுாரில் பதற்றமான ஓட்டுச்சாவடிகள்... 337 இடங்கள்!
ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில், தி. மு. க. , - அ. தி. மு. க. , உள்ளிட்ட 31 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், இரண்டு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 337 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டு உள்ளன. ஓட்டுச்சாவடிகளில், சாய்வு தளங்கள் சீரமைப்பு உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில், தி. மு. க. , வேட்பாளர் டி. ஆர். பாலு, அ. தி. மு. க. , வேட்பாளர் பிரேம்குமார், த. மா. கா. , வேட்பாளர் வேணுகோபால், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பிரபாகரன் மற்றும் பதிவு பெற்ற 11 அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் 17 பேர் என, 31 பேர் போட்டியிடுகின்றனர்.


அதிகாரிகள் ஆய்வு


இவர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 31 வேட்பாளர்களுக்குமான அடையாள அட்டைகளை, நேற்று முன்தினம் தேர்தல் அலுவலர்கள் வழங்கினர்.

கடந்த 2019 லோக்சபா தேர்தலில், 19 பேர் போட்டியிட்ட போது, ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் தலா இரண்டு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

தற்போது, லோக்சபா தேர்தலில் 31 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் தலா இரண்டு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

காஞ்சிபுரம் தொகுதியில் 11 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், ஒரு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மட்டும் பயன்படுத்தப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி