கூடுவாஞ்சேரி அருகே தனியார் நிறுவனத்தில் 20-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த கன்னிவாக்கம் பகுதியில் பாலிஹோஸ் எனும் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 5-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இங்கு பிளாஸ்டிக் பைப்புகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை 10: 30 மணி அளவில் ஐந்திற்கும் மேற்பட்ட கார்களில் வந்த 20-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் வருமானவரித்துறை அதிகாரியில் சோதனைகள் ஈடுபட்டு வருவதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளன. இதே போல செங்கல்பட்டு மாவட்டத்தில் புதுப்பாக்கம் பகுதியில் உள்ள தொழிற்சாலையிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.