புகையிலை பொருட்கள் விற்றவர் மீது வழக்கு

560பார்த்தது
புகையிலை பொருட்கள் விற்றவர் மீது வழக்கு
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, செங்கல்பட்டு நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கடையில் சோதனை நடத்திய போலீசார், விற்பனைக்கு வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்ததாக, தச்சூர் கிராமத்தை சேர்ந்த தினேஷ், 30, என்பவர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். "

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி