தமிழகத்தில் விழுப்புரம், செஞ்சி, ஊட்டி, குன்னுார், கூடலுார், கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களிலும், கேரள மாநிலத்திலும், இஞ்சி அதிகளவு பயிரிடப்படுகிறது. காஞ்சிபுரம் சந்தைகளில், இரு மாதங்களுக்கு முன், கிலோ இஞ்சி, அதிகபட்சமாக, 250 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்தது. தற்போது, நன்கு உலர்ந்த பழைய இஞ்சி கிலோ 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில், இஞ்சி அறுவடை துவங்கி வரத்து அதிகரித்துள்ளதால், காஞ்சிபுரத்தில் நடமாடும் வாகனங்களில் ஈரப்பதம் அதிகம் உள்ள, கிலோ இஞ்சி 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இல்லத்தரசிகள் இஞ்சியை கிலோ கணக்கில் வாங்கிச் சென்றனர்.