செங்கையில் ஆயிரம் வகையான ஆம்லெட்டுகளை போட்டு உலக சாதனை

65பார்த்தது
10 நிமிடத்தில் ஆயிரம் வகையான ஆம்லெட்டுகளை போட்டு உலக சாதனை செய்த தனியார் கல்லூரி மாணவர்கள்

ரக ரகமாக காட்சிப்படுத்திய ஆம்லெட்டுகளை கண்டு களித்து சுவைத்து பார்த்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்.!!


செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் அருகே பிரபல தனியார் கல்லூரி அமைந்துள்ளது அங்கு பயிலும் மாணவர்கள் பத்து நிமிடங்களில் ஆயிரம் வகையான ஆம்லெட்டுகளை தயாரித்து உலக சாதனையை பதிவு செய்தனர்

இந்த உலக சாதனை நிகழ்வினை சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்
அருண்ராஜ் அவர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார் பின்பு மாணவர்கள் தயாரித்து காட்சிப்படுத்திய ஆயிரம் ஆம்லெட்டுகளை பார்வையிட்டார் பின்பு அதை சுவைத்து பார்த்துவிட்டு பாராட்டுகளை தெரிவித்தார்.

உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி கல்லூரியின் முதல்வர் பூமிநாதன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது இதில் 500 மாணவர்கள் பங்கேற்று ஆயிரம் ஆம்லெட்டுகளை தயாரித்து உலக சாதனை படைத்தனர்

இந்த உலக சாதனையை ஐன்ஸ்டீன் உலக சாதனைக்கான சான்றிதழை அதன் நிறுவனர் கார்த்திக் குமார் அவர்கள் வழங்கினார்.!!

பின்பு மாணவர்கள் தங்களது உற்சாகத்தை வெளிக்கொண்டுவரும் வகையில் கத்தி கூச்சலிட்டு அரங்கத்தை அதிரவைத்து மகிழ்ச்சியை கொண்டாடினர்.!

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி