சிடி சினிமா என்று அழைக்கப்பட்ட சிட்டி சினிமா மதுரை தெற்கு மாசி வீதியில் அமைந்திருந்தது. 1930-ல் திறக்கப்பட்ட இந்த அரங்கத்தில் தியாகராஜ பாகவதர் நடித்த 'ஹரிதாஸ்' திரைப்படம் 2 ஆண்டுகள் வெற்றிநடை போட்டது. தமிழ்ப் படங்கள் பல இங்கு திரையிடப்பட்டாலும் இங்கு வெளியிடப்பட்ட ஆங்கிலப் படங்களுக்காகவே இந்த அரங்கம் இன்று வரை மக்களிடையே நினைவு கொள்ளப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்னரே இந்த அரங்கம் மூடப்பட்டு விட்டது.