'நானும் ரௌடிதான்' வெளியாகி 10 ஆண்டுகளை கடந்த பின்பும், உங்களது இழிவான செயல்களை மறைக்கும் வகையிலான போலியான முகமூடியை அணிந்துகொண்டு உங்களால் வலம் வர முடியும் என நடிகை நயன்தாரா தனுஷை கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் அவர், "ஒரு திரைப்படத்திற்கு எதிரான உங்களது கொடும் சொற்களை என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது. 'நானும் ரௌடிதான்' படத்தின் வெற்றி, உங்களை உளவியல் ரீதியாக வெகுவாக பாதித்ததை சினிமா நண்பர்கள் மூலமாக தெரிந்துகொண்டேன்" என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.