செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மாமல்லபுரம் ஐந்துரதம் புராதன சின்னம் அருகில் நோ பார்க்கிங் வழியாக 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் இருந்த கார் ஒன்று அங்கு காரை பார்க் செய்ய செல்ல முயன்றது. அந்த காரை அங்குள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்துமாறும், நோ என்டிரி வழியாக கார் செல்லக்கூடாது என்று ஐந்துரதம் வணிக வளாக வாகன நிறுத்துமிட செக்குயுரிட்டி ஏழுமலை (வயது49) என்பவர் அந்த காரை வழிமறித்து நின்றார். அப்போது அவரை இடிப்பதுபோன்று, அவரின் சொல்லை மீறி அந்த கார் நோ எனட்ரியில் செல்ல முயன்றது. அப்போது காரில் வந்தவர்களை நோக்கி வாகன நிறுத்துமிட பணியாளர் ஏழுமலை ஏதோ திட்டியதாக தெரிகிறது. உடனே காரில் இருந்து இறங்கிய டிப்-டாப் உடை அணிந்திருந்த 2 பெண்களும் ஏய் யாரை பார்த்து பொறம்போக்கு என்கிறாய் என ஆவேசமடைந்து, பத்திரகாளியாக மாறி, ஒரு பெண் ரவுடிகள் போன்று காரைவிட்டு திபு திபு வென கீழே இறங்கினர். அவர்கள் ஆவேசமடைந்து நடுரோட்டிலேயே ஏழுமலையை சரமாரியாக அடித்து உதைத்தனர். உடன் வந்த 2 ஆண்களும் சேர்ந்து நடுரோட்டில் அந்த வாகன நிறத்துமிட செக்குயுரிட்டியை கடுமையாக தாக்கினர். இந்த காட்சி தற்போது இணையத்தில் வீரராக பரவி வருகிறது.