செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை லட்சுமிபுரத்தில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து, குரோம்பேட்டை போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த விஜய், 28, என்பவர் வீட்டில், சந்தேகத்தின்படி நேற்று முன்தினம் (செப்.9) சோதனை நடத்தினர்.
அங்கு பதுக்கி வைத்திருந்த, 310 போதை மாத்திரைகள், 200 கிராம் கஞ்சா மற்றும் 36,000 ரூபாய், நான்கு மொபைல் போன் ஆகியவற்றை, போலீசார் பறிமுதல் செய்தனர். விஜய் மற்றும் அவருடன் தங்கியிருந்த ஜாஸ்மின், (27), என்ற பெண் ஆகிய இருவரிடமும் விசாரித்தனர். இதில், கணவரை பிரிந்து வந்த ஜாஸ்மின், விஜய்யுடன் தங்கி, 'ஆன்லைன்' வாயிலாக போதை மாத்திரைகள் வாங்கி விற்று வந்தது தெரிந்தது. இதையடுத்து விஜய், ஜாஸ்மின் ஆகிய இருவரையும், போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.