உலக இயற்கை பாதுகாப்பு தினத்தில் மாணவர்கள் விழிப்புணர்வு

52பார்த்தது
உலக இயற்கை பாதுகாப்பு தினத்தில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நடைப்பயணம் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பையனூரில் இயங்கி வரும் தனியார் கல்லூரி சார்பில் மாமல்லபுரம் அர்ஜுனன் தபசு அருகே இயற்கையை நேசிக்க வேண்டும் இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி நடைபயண நிகழ்ச்சி நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக மாமல்லபுரம் காவல் உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு கலந்து கொண்டு கொடியசைத்து நடை பயணத்தை துவக்கி வைத்தார் தொன்மையான கலாச்சார பாரம்பரியத்தை கொண்ட யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட சிற்பங்கள் குறித்து சுற்றுலா வழிகாட்டிகள் மூலம் மாணவ மாணவியருக்கு விளக்கி கூறப்பட்டது இயற்கையோடு மாணவர்களுக்கு பிணைப்பை ஏற்படுத்தவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது வெண்ணெய் உருண்டை பாறை அருகே துவங்கிய பேரணி மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் ஐந்துரதம் உள்ளிட்ட பகுதிகளில் சென்று இறுதியாக பேருந்து நிலையத்தை வந்தடைந்தது பேரணியில் கல்லூரி பேராசிரியர்கள் சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி