திருப்போரூர் பேரூராட்சியில் அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சிக்குட்பட்ட 11வது வார்டு கன்னியம்மன் கோயில் தெருவில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த திங்கட்கிழமை முதல் கால யாக பூஜை கணபதி ஹோமத்துடன் பல்வேறு வேள்விகள் துவங்கி நேற்று இரண்டாம் கால யாக பூஜை இன்று மூன்றாம் கால யாக பூஜை என பல்வேறு வேள்விகள் முடிவுற்ற நிலையில் மங்கள வாத்தியம் வானவேடிக்கைகள் முழங்க யாகசாலையில் உள்ள புனித நீர் உள்ள கலசத்தை சிவாச்சாரியார்கள் கொண்டு சென்று கோவில் விமானத்திற்கும் மூலவர் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ வாராஹி அம்மனை தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.