காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள சிறுவாக்கம், புரிசை, புள்ளலுார், மூலப்பட்டு, மணியாச்சி, சாமந்திபுரம் உள்ளிட்ட வட்டாரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் மல்லிகைப்பூ காஞ்சிபுரம் பூக்கடை சத்திரத்திற்கும் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
இதுகுறித்து, பூக்கடை சத்திரம் ஆர். ராஜா கூறியதாவது:
மார்கழி மாத பனிப்பொழிவால் மல்லிகைப்பூ விளைச்சல் குறைந்து, வரத்து குறைந்துள்ளது. இதனால், கிலோ 1, 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தை மாதத்தில் வரும் முகூர்த்த நாட்களில் விலை மேலும் அதிகரிக்கும்.
மாசி மாதத்தில் இருந்து அடுத்த பருவத்திற்கான மல்லிகைப்பூ விளைச்சல் துவங்கும். பங்குனி, சித்திரை மாதங்களில், மல்லிகைப்பூ விலை வீழ்ச்சியடையும்.