மறைமலை நகரில் புதிய மேம்பாலத்திற்கு எதிர்த்து ஆர்ப்பாட்டம்

63பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் நகராட்சிக்குட்பட்ட பேரமனூர் பகுதியில் ரயில்வே தண்டவாளம் உள்ளது. மறைமலை நகரில் இருந்து சட்டமங்கலம், திருக்கச்சூர், பனங்கோட்டூர், ஆப்பூர், தாலிமங்களம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு இந்த ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இந்த பகுதியில் உள்ள ரயில்வே கேட்டில் ஏராளமான வாகனங்கள் நின்று செல்வதால் ஜிஎஸ்டி சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் ஜிஎஸ்டி சாலையிலிருந்து பேரமனூர் செல்லும் வழியில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேம்பாலம் அமைப்பதால் சாமியார் கேட் பகுதியில் புறம்போக்கு நிலத்தில் குடியிருக்கும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும், இதனை மறைமலை நகர் மற்றும் காட்டாங்குளத்தூர் இடையே உள்ள பகுதிகளில் பாலத்தை அமைக்குமாறும் தெரிவித்துள்ளனர்.

மேலும், இங்குள்ள பொதுமக்களின் வீடுகளை காலி செய்யும் பட்சத்தில் அவர்களுக்கு தலா 3 சென்ட் இடம் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி