காஞ்சியில் அக். , 2ல் கிராம சபை கூட்டம்

82பார்த்தது
காஞ்சியில் அக். , 2ல் கிராம சபை கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், காந்தி ஜெயந்தி நாளான, வரும் அக். , 2ம் தேதி, காலை 11. 00 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. கிராம சபைக் கூட்டங்களில், கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்ட பணிகள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, துாய்மையான குடிநீர் வினியோகத்தை உறுதி செய்தல் போன்றவை விவாதிக்கப்படும். மேலும், மக்கள் திட்டமிடல் இயக்கம், மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு, 'ஜல்ஜீவன்' இயக்கம் மற்றும் இதர ஊராட்சி செயல்பாடுகள் குறித்து கிராம சபை கூட்டத்தில் பகிர்ந்து கொண்டு விவாதிக்கப்படும்.


மேலும், ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட வரவு - செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலகத்தின் தகவல் பலகையில் வெளிப்படுத்த வேண்டும் மற்றும் பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக பிளக்ஸ் பேனர் வாயிலாக வரவு - செலவு கணக்கு வைக்கப்பட வேண்டும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி