வேளாண் ஈடுபொருட்கள் வாங்கும் விவசாயிகள், ஆன்லைன் வாயிலாக பணமில்லா பரிவர்த்தனை செய்யலாம் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, வேளாண் இணை இயக்குனர் செல்லபாண்டியன் அறிக்கை: செங்கல்பட்டு மாவட்டத்தில், அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், பவுஞ்சூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், சிட்லபாக்கம் ஆகிய வட்டாரங்களில், வேளாண்மை விரிவாக்க மையங்கள் உள்ளன.
இங்கு, விவசாய இடுப்பொருட்களான விதை, நுண்ணுாட்ட உரங்கள், உயிர் உரங்கள், தெளிப்பான்கள், ஜிப்சம், சிங்க் சல்பேட், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் மற்றும் அனைத்து மானிய திட்ட இடுபொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேற்கண்ட மையங்களுக்கு, விவசாயிகள் பங்களிப்பு தொகை வழங்கும் போது, பணமாக வழங்காமல், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, யு. பி. ஐ. , பரிவர்த்தனை வாயிலாக பணம் செலுத்தலாம்.
இதனை பெறுவதற்கு, வேளாண்மை அலுவலகங்களில், பி. ஓ. எஸ். , இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழக அரசின்
உத்தரவுப்படி, அனைத்து விவசாயிகளும் பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். இது தொடர்பாக, அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை, விவசாயிகள் அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.