"டூ - வீலர் மீது ஆட்டோ மோதி சிறுவன் உட்பட இருவர் காயம்

58பார்த்தது
"டூ - வீலர் மீது ஆட்டோ மோதி சிறுவன் உட்பட இருவர் காயம்
கூடுவாஞ்சேரி அடுத்த மெருமாட்டுநல்லுார் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ், ௪௨. இவரின் மகன் ஹர்ஷித் கிருஷ்ணா, ௪, நந்திவரம்- - நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில், யு. கே. ஜி. , படிக்கிறார். நேற்று மாலை பள்ளி முடிந்து, ஹர்ஷித் கிருஷ்ணா தன் மாமா ரஞ்சித், 27, உடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றார். அப்போது, கூடுவாஞ்சேரி சிக்னலில் இருந்து, பெருமாட்டுநல்லுார் நோக்கி, அதி வேகத்தில் சென்ற ஆட்டோ, இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஹர்ஷித் கிருஷ்ணா, ரஞ்சித் ஆகிய இருவரும் துாக்கி வீசப்பட்டனர். இருவருக்கும், தலையில் காயம் ஏற்பட்டு, கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பாக, சிறுவனின் தந்தை ரமேஷ் அளித்த புகாரின்படி, கூடுவாஞ்சேரி போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமரா காட்சி பதிவுகள் வாயிலாக, விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவான ஆட்டோ டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். "

தொடர்புடைய செய்தி