சித்தாமூரில் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரை கூட்டம்

66பார்த்தது
பாசிச பாஜகவை வீழ்த்துவோம், ஜனநாயக இந்தியாவை கட்டியமைப்போம் என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரை கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சித்தாமூர் கிராமத்தில் பாசிச பாஜகவை வீழ்த்துவோம், ஜனநாயக இந்தியாவை கட்டியமைப்போம் என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தேர்தல்
பரப்புரை கூட்டம் மக்கள் மன்றம் சார்பில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஒன்றிய பெருந்தலைவர் ஏழுமலை, திமுக ஒன்றிய செயலாளர் சிற்றரசு ஆகியோர் கலந்து கொண்டு பாசிச பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் எடுத்துக் கூறினர்.
அந்தக் கூட்டத்தில் மக்கள் மன்றத்தினர் இந்தியா கூட்டணியை ஆதரிப்போம், திமுக கூட்டணியை முழுமையாக வெற்றி பெற செய்வது குறித்த பல்வேறு விழிப்புணர்வு பாடல்களை பாடி வாக்காளர்களை கவர்ந்தனர்.

தொடர்புடைய செய்தி