அரசு பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீச்சி

542பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கல்குளம் கிராமத்திற்கு மதுராந்தகத்திலிருந்து கல்குளம் நோக்கி சென்ற T 4 அரசு பேருந்து சென்று கொண்டிருந்த பொழுது தச்சூர் என்ற இடத்தில் மர்ம நபர்கள் கல்விச்சு தாக்குதல் நடத்தியதால் பேருந்தின் பின்புறம் உள்ள கண்ணாடி உடைந்து முழு சேதம் அடைந்தது உடனே பேருந்தை நிறுத்திவிட்டு ஓட்டுநர் மற்றும் நடத்தினார் கண்ணாடி உடைத்தது பற்றி அப் பகுதி மக்களிடம் கேட்ட பொழுது அப்பகுதி மக்கள் மனநிலை பாதிக்கப்பட்ட நபர் கல்வ
வீச்சி தாக்கியதாக குற்றம் சாட்டினர் ஆனால் அவரிடம் விசாரித்த பொழுது அவருக்கும் இந்த கல்வீச்சு தாக்குதலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை இது குறித்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கிராம மக்களிடம் விசாரணை செய்த போது கிராம மக்களுக்கும் மற்றும் நடத்துனூருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பேருந்து நிறுத்திவிட்டு அணைக்கட்டு காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர் போலீசார் வாகனத்தை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்ல வலியுறுத்தியதால் பேருந்து அணைக்கட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது இந்த சம்பவத்தால்தச்சூர் பகுதிக்கு வர வேண்டிய 100 C அணைக்கட்டுக்கு செல்லக்கூடிய பேருந்தும T. 10 ஆகிய பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி