செங்கை, காஞ்சி, தேர்வு கண்காணிப்பாளர் நியமனம்

577பார்த்தது
செங்கை, காஞ்சி, தேர்வு கண்காணிப்பாளர் நியமனம்
தமிழகம் முழுதும், மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில், 10 மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.


இந்த தேர்வு மையங்களை கண்காணிக்கவும், வினாத்தாள்களின் பாதுகாப்பு உறுதி செய்வதற்கும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு தேர்வு கண்காணிப்பாளர் நியமிக்கப்படுவார்கள்.

அதன்படி, செங்கல்பட்டு மாவட்ட தேர்வு கண்காணிப்பாளராக ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்க திட்ட இயக்குனர் ஆர்த்தி, காஞ்சிபுரத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் உமா, திருவள்ளூருக்கு பள்ளி கல்வி இயக்க இயக்குனர் அறிவொளி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்கள், தேர்வு தொடர்பான ஆலோசனை கூட்டம், வினாத்தாள்கள் மையங்களின் பாதுகாப்பு உறுதி செய்யும் பணிகள் உள்ளிட்ட கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வர்.

மேலும், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவர் என, கல்வித் துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி