சேலையூரை அடுத்த மாடம்பாக்கம், ஸ்ரீராம் நகரைச் சேர்ந்தவர் யுவராஜ், 37; கார் ஓட்டுனர். இவரது மனைவி சந்தியா, 28; செவிலியர்.
இவர்களுக்கு திருமணமாகி, நான்கு ஆண்டுகள் ஆகின்றன. தம்பதி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக, சந்தியா கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்று உள்ளார். இதனால், குடிபோதைக்கு அடிமையான யுவராஜ், தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.