கார் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு

74பார்த்தது
சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு.


செங்கல்பட்டு மாவட்டம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் படாளம் அடுத்த புத்தகத்துறை பகுதியில் சென்னை நோக்கி கார் சென்று கொண்டிருந்தது.

அப்போது காரில் இருந்து லேசாக புகை வர தொடங்கியது சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் காரை ஓரமாக நிறுத்திவிட்டு காரில் பயணம் செய்த நான்கு பேரும் காரைவிட்டு கீழே இறங்கினர் சற்று நேரத்தில் கார் எதிர்பாராத விதமாக தீ மல மலவென எரியத் தொடங்கியது.

கார் விபத்து குறித்து மதுராந்தகம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கார் விபத்து குறித்து மதுராந்தகம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீ பற்றி எரியும் காரை தண்ணீர் அடித்து தீயை கட்டுக் கொள் கொண்டு வந்தனர்.

திடீரென சாலையில் வந்து கொண்டிருந்த கார் கொழுந்துவிட்டு எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி