பெரும்பேர்கண்டிகை கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

50பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் பெரும்பேர்கண்டிகை கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகம் கோட்டாட்சியர் தியாகராஜன் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் சாவதிரி ஏற்பாட்டில் நடைபெற்றது.

இந்த முகாமிற்கு காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க. சுந்தர் எம். எல். ஏ,
ஒன்றியக் குழு பெருந்தலைவர் கண்ணன், ஒன்றிய கழக செயலாளர் தம்பு, மாவட்ட கவுன்சிலர் வசந்தா ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
இந்த மக்களுடன் முதல்வன் திட்டத்தில்
சுகாதாரத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சமூக நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி தறை,
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கூட்டுறவு துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மின்சார வாரியம், மாற்றுத்திறனாளிகள் துறை, காவல் துறை, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை, தோட்டக்கலை மற்றும் மலை பயிர் துறை சார்ந்த அதிகாரிகளிடம் பெரும்பேர்கண்டிகை, கடமலைபுத்தூர், தொழுப்பேடு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

தொடர்புடைய செய்தி