செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டசபை மதிப்பீட்டு குழு ஆய்வு

62பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக, தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவின் தலைவர் மற்றும் வேடசந்தூர் எம் எல்ஏ. எஸ். காந்திராஜன் தலைமையிலான குழுவினர் இன்று திருக்கழுக்குன்றம் ஒன்றிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர் குழிப்பாந்தண்டலம் கிராமத்தில் அமைந்துள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், மேற்கண்ட குழுவினர் ஆய்வு செய்தனர். பின்னர், கொத்திமங்கலம் ஊராட்சியின் புலிக்குன்றம் கிராமத்தில் சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுவினருடன் விவசாயிகள் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், விவசாயிகள் தங்களின் பல்வேறு கோரிக்கைள் குறித்து சட்டப்பேரவை குழுவினரிடம் தெரிவித்தனர். இதில், விவசாயிகளுக்கு வயது முதிர்வை காரணம் கூறி கூட்டுறவு சங்கங்களின் வங்கி கடன் வழங்க மறுப்பதாக தெரிவித்தனர். மேலும், நெல் கொள்முதல் நிலையங்களை ஒருமாதத்துக்கு முன்னதாக திறக்க வேண்டும் மற்றும் காட்டு பண்றிகளால் நெல் பயிர்கள் சேதமடைவதால் அவற்றை கட்டுப்படுத்த உரிய நடவடிக்க எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து, விவசாயிகள் கோரிக்கைகள் தொடர்பாக உரிய முறையில் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மேற்கண்ட குழுவினர் தெரிவித்தனர். முன்னதாக, மகளிர் சுய உதவிகுழுவினருக்கு ரூ. 69. 89 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி