பள்ளம்பாக்கம் அம்மன் கோவில்களில் 21ல் ஆடி திருவிழா

63பார்த்தது
பள்ளம்பாக்கம் அம்மன் கோவில்களில் 21ல் ஆடி திருவிழா
காஞ்சிபுரம் அடுத்த, பள்ளம்பாக்கம் அருந்ததியர்பாளையம் கிராமத்தில், மகிஷாசுரமர்த்தினியம்மன்மற்றும் சூரியவாழியம்மன் கோவில்கள் உள்ளன. ஜூலை- 21ல் ஆடித் திருவிழா நடைபெற உள்ளது.

விழாவை முன்னிட்டு, ஜூலை- 19ல் பால்குட ஊர்வலம் மற்றும் கரக வீதியுலா நிகழ்ச்சி நடைபெறஉள்ளன. 20ல்உறியடிக்கும் நிகழ்ச்சியும், 21ல் அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி மற்றும் பொங்கலிடும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

அன்றைய தினம் இரவு 11: 00 மணிஅளவில், முத்தாலம்மன் நாடக மன்றத்தினரின் நாடகம் நடைபெறும் என, கோவில்நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்தி