செங்கல்பட்டில் உடல் தானம் செய்த உடலுக்கு மரியாதை

74பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்தில் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் மா. சா. முன்னுசாமி. இவர் 1984ல் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர். இவர் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியில் மாநிலத் தலைவராக 6 ஆண்டுகளும், மாநில பொருளாளராக 3 ஆண்டுகளாகவும் பணி புரிந்து வந்தார். மாவட்ட தலைவராக 15 ஆண்டுகள் பொறுப்பு வகித்துள்ளார். இடதுசாரி சிந்தனை கொண்டவர்.

புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, புதிய பொருளாதார கொள்கை எதிர்ப்புக்காக பல போராட்டங்களையும், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க கோரி 1972, 1981, 1985, 1988 ஆகிய காலங்களில் போராட்டங்களை முன்னின்று நடத்தியதாக கூறப்படுகிறது.
இவர் நேற்று கருங்குழி பகுதியில் காலமானார். இந்நிலையில் இவர் இறப்பிற்குப் பிறகும் அவரது உடல் மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும் என்ற உயரிய நோக்கில் அவரது உடலை செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரிக்கு உடற்கூறு ஆய்வு வகுப்பிற்க்கு அவரது குடும்பத்தினர் தானம் செய்தனர்.

அவரது உடலை தானம் செய்ததால் குறு சிறு தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன் மற்றும் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையின் முதல்வர் ஜோதி குமார் ஆகியோர் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் மா. சா. முன்னுசாமியின் உடலுக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி