தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா

63பார்த்தது
78-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு படூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களுக்கு கிராம பிரியாணி விருந்து அளித்து தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது செங்கல்பட்டு மாவட்டம் படூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தின் முடிவில் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கும், ஊராட்சியில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் கிராம பிரியாணி விருந்து அளித்து உபசரிக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை ஊராட்சி மன்ற தலைவர் தாராசுதாகர் வழங்கினார், இந்த நிகழ்ச்சியில் மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை நிறுவனர் கே ஏ எஸ். சுதாகர் படூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர். வனிதா சேட்டு, ஒன்றிய கவுன்சிலர் நந்தினி பஞ்சா,
முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சேகர்,
வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி