கார் மோதி வாலிபர் பலி

64பார்த்தது
கார் மோதி வாலிபர் பலி
மாமல்லபுரம் அடுத்த நெம்மேலியைச் சேர்ந்தவர் முகமது ரபிக், 42. கூலித் தொழிலாளி.

நேற்று முன்தினம் இரவு, நெம்மேலி பேருந்து நிறுத்தம் அருகே, சாலையின் குறுக்கில் கடந்து செல்ல முயன்றார். அப்போது, சென்னையிலிருந்து புதுச்சேரி நோக்கிச் சென்ற மாருதி கார், அவர் மீது மோதியது.

இந்த விபத்தில் தலையில் காயமடைந்த முகமது ரபிக், சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது தாயார் ஜமீலா அளித்த புகாரின்படி, மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி