அரசு பள்ளியில் மேல் கூரை இடிந்து விழுந்து 5 மாணவர்கள் காயம்

77பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த சிறுதாவூர் ஊராட்சியில் அரசினர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது,
இந்த பள்ளியில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை 150 மாணவ மாணவிகளும் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை 202 மாணவ மாணவிகளும் பயின்று வருகின்றனர். இந் நிலையில் மாணவ மாணவிகள் வழக்கம் போல் இன்று காலையில் பள்ளிக்கு வந்தனர். பத்தாம் வகுப்பில் 48 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்,

இந்நிலையில் பத்தாம் வகுப்பில் ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்தி வந்துள்ளார். அப்போது பாடம் கவனித்துக் கொண்டிருந்த மாணவ மாணவிகள் மீது திடீரென்று மேற்கூரை இடிந்து பல பலவென மாணவ மாணவியரின் தலையில் விழுந்துள்ளது. இதில் சுஜி, பிரதிக்சா, தமிழஅரசி, சுவாதிகா, கிருஸ்கா மற்றும் கேப்டன் உள்ளிட்ட 6 பேரும் பலத்த காயமடைந்தனர். உடனே அருகில் இருந்த மாணவ மாணவிகள் அலறியடித்து வெளியே ஓடிவந்துள்ளனர்,

காயமடைந்த மாணவ மாணவிகளை ஆசிரியர்கள் மீட்டு திருப்போரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அப்போது சுஜி என்ற மாணவிக்கு தலையில் நான்கு தையல்கள் போடப்பட்டுள்ளது. மற்ற மாணவ மாணவிகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதால் முதலுதவி சிகிச்சை அளித்து மீண்டும் அனைவரையும் ஆசிரியர்கள் பள்ளிக்கு அழைத்து வந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி