"தாம்பரம் - வேளச்சேரி சாலை விரிவாக்கம்... இழுபறி!

82பார்த்தது
"தாம்பரம் - வேளச்சேரி சாலை விரிவாக்கம்... இழுபறி!
தாம்பரம் - வேளச்சேரி சாலையை, ஆறுவழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி, பல ஆண்டுகள் ஆகியும் நிறைவடையாததால், தினமும் நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

ஜி. எஸ். டி. , சாலை போல் முக்கியமானது, தாம்பரம் - வேளச்சேரி சாலை. கிழக்கு தாம்பரத்தில் துவங்கும் இச்சாலை, சேலையூர், கேம்ப் ரோடு, செம்பாக்கம், வேங்கைவாசல், மேடவாக்கம், பள்ளிக்கரணை வழியாக வேளச்சேரியை அடைகிறது.


இதன் நீளம், 16. 3 கி. மீ. , ஜி. எஸ். டி. , சாலைக்கு மாற்றாக விளங்குவதால், கிழக்கு தாம்பரத்தில் இருந்து, இதன் வழியாக சென்னையின் பல்வேறு இடங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதன் காரணமாக, போக்குவரத்து அதிகரித்தது. வாகன எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, 1992ம் ஆண்டு, ஒரு வழிப்பாதையாக இருந்த இச்சாலை, நான்கு வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யப்பட்டது.

அப்போது, நில எடுப்பு காரணமாக, பல இடங்களில் விரிவாக்க பணிகள் நடக்கவில்லை. பின், படிப்படியாக விரிவாக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், 10 ஆண்டுகளில் இச்சாலையை ஒட்டியுள்ள மடிப்பாக்கம், பெரும்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகள், அசுர வளர்ச்சியடைந்துள்ளன.

தனியார் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனால், 24 மணி நேரமும், வாகன போக்குவரத்து நிறைந்த சாலையாக மாறிவிட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி