மறைமலை நகரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டம் அண்ணாமலை பேசும்போதே கலைந்து சென்ற பெண்கள்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே பாவேந்தர் சாலையில் பாரதிய ஜனதா கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் வேதா சுப்ரமணியன் தலைமையில் என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் பாத யாத்திரை நிகழ்வு நடைபெற்றது
இந்த நிகழ்வில்
பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்
அவ்வபோது பிரச்சார வாகனத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பேசிக்கொண்டிருந்த போது பொதுக் கூட்டத்திற்கு வந்த சில பெண்கள் கூட்டத்தில் இருந்து வெளியே சென்றனர்
முறையான அமர்வதற்கு சேர் போன்ற வசதிகள் இல்லாததால் நீண்ட நேரமாக காத்திருந்த பெண்கள் குறிப்பாக முதியவர்கள் குறிப்பிட்ட சில பேர் அண்ணாமலை பேசிக்கொண்டிருக்கும் போது கூட்டத்திலிருந்து வெளியே சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.