காஞ்சி கலெக்டர் வளாகத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள்

61பார்த்தது
காஞ்சி கலெக்டர் வளாகத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள்
உதவித்தொகை கேட்டு விண்ணப்பம் செய்த மாற்றுத்திறனாளிகளுக்கு, இரு ஆண்டுகளாக உதவித்தொகை மற்றும் வீட்டு மனை பட்டா வழங்காதது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கோரிக்கையாக விடுத்து வருகின்றனர்.

ஆனால், கோரிக்கைகளை நிறைவேற்றாததால், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக நேற்று வந்தனர்.

மாற்றுத்திறனாளிகள் பேரணியாக வருவதை பார்த்த போலீசார், கலெக்டர் வளாக கதவை அடைத்தனர். இதனால், கலெக்டர் வளாக வாசலிலேயே, தங்களது கோரிக்கையை நிறைவேற்ற மாற்றுத்திறனாளிகள் முழக்கமிட்டனர்.

இதையடுத்து, கலெக்டரின் நேர்முக உதவியாளர் யோகஜோதி, மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டார்.

இதையடுத்து, மாற்றுத்திறனாளிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி