அரசியல் கட்சி துண்டுகளுக்கு ஜவுளி கடைகளில் கிராக்கி

71பார்த்தது
அரசியல் கட்சி துண்டுகளுக்கு ஜவுளி கடைகளில் கிராக்கி
காஞ்சிபுரம் லோக்சபா தேர்தலில், அ. தி. மு. க. , வேட்பாளர் ராஜசேகர், தி. மு. க. , வேட்பாளராக சிட்டிங் எம். பி. , செல்வம், பா. ம. க. , வேட்பாளர் ஜோதி ஆகிய பிரதான கட்சி வேட்பாளர்கள், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஓட்டு சேகரிக்க செல்லும் வேட்பாளர் மற்றும் அதே கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களை வரவேற்க, அவர் சார்ந்த கட்சியைச் சேர்ந்த துண்டுகளை போர்த்தி வரவேற்கின்றனர்.

இந்த கட்சி துண்டுகளுக்கு, காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் ஆகிய நகரங்களில் இருக்கும் ஜவுளிக்கடைகளில், தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

இதனால், அரசியல் கட்சியினர் சென்னைக்கு சென்று மொத்தமாக கட்சி துண்டுகளை வாங்கி வந்து, ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையிலும் கிடைக்காத சில நேரங்களில், சாதாரண துண்டுகளை போட்டு ஓட்டு சேகரித்து வருகின்றனர்.

தவிர, ஓட்டு சேகரிப்பில் கிராமம் மற்றும் நகரங்களில் முக்கிய நபர்களுக்கு வேட்டி போட்டு ஓட்டு சேகரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி