கள்ளக்குறிச்சி அடுத்த திம்மலை கிராமத்தில் வசிக்கும் இருளர் சமுதாய மக்கள் சிலர் கோரிக்கை மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திம்மலை கிராமத்தில் வசிக்கும் எங்களுக்கு வீடு, நிலம் இல்லை. ஏரிக்கரை அருகே வசிக்கிறோம்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இருளர் சமுதாய மக்கள் வீடு கட்ட இடம் தருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, எங்களுக்கு அரசு இடம் மற்றும் வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.