சங்கராபுரம் அடுத்த பொய்குனம், தியாகராஜபுரம் ஊராட்சிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார்.
சங்கராபுரம் அடுத்த பொய்குனம் ஊராட்சியில் 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணியை மாவட்ட திட்ட இயக்குனர் ரமேஷ்குமார் ஆய்வு செய்தார். பின், 30 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி அலுவலக கட்டடம் கட்டுமான பணி, பொய்குனம் ஜவுளி குப்பம் சாலையில் 2. 41 கோடி ரூபாயில் கட்டப்படும் உயர்மட்ட பாலம், ஒரு கோடியே 21 லட்சத்தில் பொய்குனம் - அரசம்பட்டு தார் சாலை பணி ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது பி. டி. ஓ. க்கள் அய்யப்பன், மோகன்குமார், ஒன்றிய பொறியாளர் ராஜகோபால், பணி மேற்பார்வையாளர் கோவிந்தசாமி, மண்டல துணை பி. டி. ஓ. , க்கள் கனிமொழி, பிரியதர்ஷினி ஊராட்சி தலைவர் அன்பு அன்பரசு உடனிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, சங்கராபுரம் ஒன்றியம், தியாகராஜபுரம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கலைஞர் கனவு இல்ல கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தார். ஊராட்சி தலைவர் சங்கரன் உடனிருந்தனர்.