வள்ளலார் கோவிலில் நன்னீராட்டு நாள் விழா

85பார்த்தது
வள்ளலார் கோவிலில் நன்னீராட்டு நாள் விழா
சங்கராபுரம் வள்ளலார் கோவிலில் நன்னீராட்டு நாள் விழா நடந்தது.

மன்ற பொருளாளர் முத்துகருப்பன் தலைமை தாங்கினார். சன்மார்க்க இளைஞரணி நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், சந்திரசேகர், தணிக்கையாளர் சக்கரவர்த்தி முன்னிலை வகித்தனர். வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன் வரவேற்றார்.

தமிழ்ப் படைப்பாளர் சங்கத் தலைவர் இளையாப்பிள்ளை, ஆசிரியர் லட்சுமிபதி முன்னிலையில் அகவல் படித்து உலக அமைதிக்காக பிரார்த்திக்கப்பட்டது.

பின்னர் சிறப்பு ஜோதி தரிசனத்தை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

முன்னாள் ரோட்டரி தலைவர் மூர்த்தி சன்மார்க்க கொடியேற்றினார். மருந்தாளுனர் பழனியாபிள்ளை உட்பட பலர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி