ரிஷிவந்தியத்தில் உள்ள பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது. இதையொட்டி மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு சிறப்பு தேனபிேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று மாலை 5 மணியளவில், கோவில் பலிபீடத்திற்கு அருகில் உள்ள நந்தி பகவானுக்கு பால், தேன், தயிர், இளநீர், உள்ளிட்ட 16 வகையான திரவிய பொருட்களை கொண்டு அபிேஷகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து பல வண்ண மலர்களால் நந்தி பகவான் சுவாமி அலங்கரிக்கப்பட்டு, மகா தீபாராதணை காண்பிக்கப்பட்டது. பூஜைகளை நாகராஜ், சோமு குருக்கள் செய்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல், பாசார் பிரம்மபுரீஸ்வரர், மேலப்பழங்கூர் வேதபுரீஸ்வரர் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.