மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

558பார்த்தது
சின்னசேலத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி, 43; இறைச்சி கடையில் பணிபுரிந்து வந்தார். கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகியது. குழந்தை இல்லை. நேற்று முன்தினம் காலை மனைவி சுதா சொந்த வேலை காரணமாக நாமக்கல்லுக்கு சென்றிருந்தார்.

அன்று இரவு 7: 30 மணியளவில் பெரியசாமி 'டிவி' சுவிட்சை ஆன் செய்துள்ளார். அப்போது, 'டிவி' சரியாக தெரியாததால் அதை சரி செய்தபோது, பெரியசாமி மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி