தமிழ்நாடு அரசு, மின்சார கட்டணம் உயர்த்தி அறிவித்திருந்தது. இதனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நேற்று நடத்தினர். அதன் ஒரு பகுதியாக உளுந்தூர்பேட்டை மேற்கு ஒன்றியத்தில், மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும் விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவருமான டி. ஏழுமலை. கண்டன உரை நிகழ்த்தினார்.