கச்சிராயபாளையம்: நுாலகம் அமைக்க பூமி பூஜை

70பார்த்தது
கச்சிராயபாளையம்: நுாலகம் அமைக்க பூமி பூஜை
கச்சிராயபாளையம் அடுத்த வடக்கனந்தல் பேரூராட்சியில் ரூ 75. 5 லட்சம் மதிப்பீட்டில் தளங்களை கொண்ட புதிய நுாலக கட்டடம் அமைக்க திட்டமிடப்பட்டது. கட்டுமான பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு உதயசூரியன் எம். எல். ஏ. , தலைமை தாங்கினார்.
பேரூராட்சி தலைவர் பன்னீர்செல்வம், பொது பணித்துறை செயற்பொறியாளர் ஹேமா, உதவி செயற்பொறியாளர் மாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி துணை தலைவர் தண்டபானி வரவேற்றார்.


நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் இமாம், பேரூராட்சி கவுன்சிலர்கள், நகரசெயலாளர் ஜெயவேல், நுாலகர் ருக்குமணி உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி