வெறும் ட்ரெய்லரே பயங்கரமா இருக்கு - ஜோதிமணி கிண்டல்!

79பார்த்தது
வெறும் ட்ரெய்லரே பயங்கரமா இருக்கு - ஜோதிமணி கிண்டல்!
எனது 10 ஆண்டு ஆட்சி வெறும் ட்ரெய்லர் தான் என பிரதமர் மோடியின் பேச்சுக்கு மக்களவை உறுப்பினர் ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், வெறும் டிரெய்லரே பயங்கரமா இருக்கு... 45 ஆண்டுகளாக இல்லாத வேலைவாய்ப்பின்மை, தாங்கமுடியாத விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி மற்றும் பணமதிப்பு நீக்கத்தால் சிறு, குறு நடுத்தர தொழில்கள் பேரழிவு, விவசாயிகள் தற்கொலை, வரலாறு காணாத தேர்தல் பத்திர ஊழல், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் பற்றியெறியும் வன்முறை, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு, பாலியல் குற்றவாளிகளை பாஜக அரசு காப்பாற்றும் கொடுமை என பதிவிட்டுள்ளார்‌‌.

தொடர்புடைய செய்தி