கடன் வழங்கும் செயலிகள் பலவும் ஒரே கிளிக் மூலம் உத்தரவாதமின்றி கடன் பெறுங்கள் என்று விளம்பரப்படுத்துகின்றனர். பிணையம் எதுவும் தேவையில்லை என்பதால் ஏழை, நடுத்தர மக்கள் கவரப்பட்டு தங்கள் மொபைலில் செயலியை பதிவிறக்கம் செய்து கடன் வாங்குகின்றனர். கடன் கட்ட சிறிது தாமதம் என்றாலும் 3 மடங்கு வட்டியை அதிகம் போட்டு நெருக்கடி கொடுக்கின்றனர். இப்படியாக ஆன்லைன் அடிப்படையிலான கடன் செயலிகள் மக்களை தங்கள் வலையில் விழ வைக்கின்றனர்.