இனி வெள்ளியங்கிரி மலையேறுபவர்களுக்கு இது கட்டாயம்

70பார்த்தது
இனி வெள்ளியங்கிரி மலையேறுபவர்களுக்கு இது கட்டாயம்
கோவை அருகே அமைத்துள்ள வெள்ளியங்கிரி மலைக் கோயிலில் சிவலிங்கத்தைத் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், கடந்த சில மாதங்களில் மலையேறும்போது 7 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் வெள்ளயங்கிரி கோயிலுக்கு மலையேறிச் செல்லும் பக்தர்களுக்கு வனத்துறை புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, மலையேறும் பக்தர்கள் முழு உடல் பரிசோதனை செய்த பிறகே மலையேற அனுமதி வழங்கப்படும். பக்தர்கள் குழுவாகவும், வனத்துறை அனுமதித்த பாதைகளில் மட்டுமே செல்ல வேண்டும், மாற்றுப் பாதையில் செல்லக்கூடாது.

தொடர்புடைய செய்தி