பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சமஸ்கிருத திணிப்பு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாட்டில் தொல்லியல் பணிகளை மேற்கொள்வதற்கு சமஸ்கிருதப் பட்டமும், சமஸ்கிருத மொழி அறிவும் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருப்பது அப்பட்டமான சமஸ்கிருத திணிப்பு. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. டிஎன்பிஎஸ்சி தொல்லியல் தொழில்நுட்பப் பணியாளர் தேர்வுக்கு சமஸ்கிருதம் கட்டாயத் தகுதி என்பதை நீக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.