கேரளாவின் பொதுக் கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி வெளியிட்ட அறிக்கையில், “பள்ளிக்கூட பைகளின் அதிக எடைகள் குறித்த புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளின் கவலைகளை நிவர்த்தி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு பரிசீலித்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக மாதத்தில் 4 நாட்கள் அரசுப் பள்ளிகளில் ‘புத்தகப்பை இல்லா நாட்கள்’ திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசிக்கிறோம்.” என்றார்.