வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்று
பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. அதன்படி, 66,564 புள்ளிகள் என ஏற்றத்துடன் தொடங்கிய மும்பை
பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் 64.66 புள்ளிகள் சரிவடைந்து 66,408.39 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. அதேபோல, என்எஸ்இ நிஃப்டி 17.35 புள்ளிகள் சரிவடைந்து 19,794.00 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 66,473 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல, நிஃப்டி 19,811 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது.