பல எதிர்பார்ப்புகளுடன் ஒலிம்பிக்கில் நுழைந்த இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர்கள் ஆரம்பத்தில் ஏமாற்றம் அடைந்தனர். 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு பிரிவில் இந்திய அணிகளால் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியவில்லை. தகுதிச் சுற்றில் அர்ஜுன்-ரமிதா ஜோடி (628.7) ஆறாவது இடத்தையும், சந்தீப்-இளவேணி ஜோடி (626.3) 12வது இடத்தையும் பிடித்தது. மறுபுறம், ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதிச் சுற்றில் சரப்ஜோத் சிங் மற்றும் அர்ஜுன் சீமா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.