வரலாற்று சாதனையுடன் மோதும் இந்தியா - தென் ஆப்பிரிக்கா

51பார்த்தது
வரலாற்று சாதனையுடன் மோதும் இந்தியா - தென் ஆப்பிரிக்கா
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியனான இந்தியாவும், டி20 உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள தென் ஆப்பிரிக்காவும் நாளை நடைபெற உள்ள இறுதி போட்டியில் மோதுகின்றன. நடப்பு தொடரில் இவ்விரு அணிகளும் விளையாடிய எந்த ஆட்டங்களிலும் தோல்வியே சந்திக்கவில்லை. தென் ஆப்பிரிக்கா விளையாடிய 8 ஆட்டங்களிலும் ( லீக் 4, சூப்பர் 8 சுற்று 3, அரையிறுதி1) வெற்றி பெற்றுள்ளது. அதேவேளை இந்திய அணி விளையாடிய 7 ஆட்டங்களிலும் ( லீக் 3, சூப்பர் 8 சுற்று 3, அரையிறுதி 1) வெற்றி பெற்றுள்ளது. டி20 உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு சீசனில் தோல்வியே சந்திக்காத அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதல் முறையாகும்.

தொடர்புடைய செய்தி