உலகில் மிக அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியாவை பார்க்கிறோம். அதிக வரிகளால் இந்தியாவில் வணிகம் செய்வது மிக கடினமாக உள்ளது. இதற்கு இணையான ஒரு ‘பரஸ்பர வரியை' அமெரிக்காவும் வசூலிக்கும் என பிரதமர் மோடி முன்னிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார். அமெரிக்கப் பொருட்களுக்கு பிற நாடுகள் விதிக்கும் அதே அளவிலான வரியை, அந்நாட்டு பொருட்களுக்கு விதிக்கும் வகையிலான அரசாணையில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.