ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தின் போது காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு 3 பிரிவுகளின் கீழ் குடியரசு தலைவர் விருது வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான விருது பெறுபவர்கள் பட்டியலை மத்திய அரசு வெளியிடப்பட்டுள்ளது. வீர தீர செயலுக்கான விருது பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த யாரும் இடம் பெறவில்லை. மற்ற 2 பிரிவுகளில் தமிழகத்தைச் சேர்ந்த DSP-க்கள், ASP-க்கள், ஆய்வாளர்கள், SI-க்கள் உள்ளிட்ட 23 அதிகாரிகள் விருதுகளை பெற உள்ளனர்.